B.A Tamil
தமிழ்த்துறை சிறப்பியல்புகள்:
தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பை மாணவர்கள் உணர்ந்துகொள்ளவும்,தமிழின் மேன்மையை உயர்த்தவும் வழிகாட்டல்.
போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற பயிற்சியளித்தல்.
தமிழ்த்துறையில் பட்டம் பெறுவதோடுஆராய்ச்சிப் படிப்புக்கு வழிகாட்டல்.
நவீன கணினிவகுப்பறை மூலம் பாடங்களை காணொளிகாட்சிகள் கொண்டுவிளக்கி தமிழ் வழி கணினியைக் கற்றுக் கொடுத்தல்.
நோக்கு
தமிழ்மொழியில் பெண்கள் அனைவரையும் பட்டம் பெறச் செய்தல்.
தீவுக்குள் வாழும் மாணவிகள் கல்விக் கற்று சிறப்படைய தமிழ்த்துறை உறுதுணையாக அமையவேண்டும்.
புடிப்பை கடினமாக நினைக்கும் மாணவிகளுக்கு தமிழ்மொழி மூலம் எளிமைப்படுத்தி படிப்பதற்கு ஆர்வம்காட்டுதல்.
மெதுவாக கற்போருக்கு எளிமையான முறையில் தமிழ்மொழி மூலம் மனப்பாடம் செய்யும் வழிகளைக் கற்றுக் கொடுத்தல்.
அப்துல்கலாம் பிறந்தமண்ணில் சிறந்த கல்விச்சிந்தனையாளர்களை உருவாக்கிக்கொடுத்தல்.
இலக்கு
வருங்கால இளைஞர்கள் தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டு தமிழ்த்துறையில் படிப்பதற்கு ஆர்வம் காட்டச் செய்தல்.தமிழ்த்துறையில் கட்டாயம் பட்டம் பெறுதல்,தமிழ்த்துறையை மேன்மையடையச்செய்தல் போன்ற குறிக்கோள்களை மேற்கொண்டுள்ளது.
